இந்தியாவின் பிரபலமான ஜோடிகளில் ஒன்று கிரிக்கெட்டர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா. சமூக வலைதளங்களில் பல லட்சம் பாலோயர்களைக் கொண்ட இவர்கள் இருவரும் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள், பதிவுகள் என அத்தனையும் இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில், நேற்று விநாயகர் சதுர்த்தி நிகழ்வை முன்னிட்டு கோலி மற்றும் அனுஷ்கா தம்பதியினர் வீட்டில் பூஜை செய்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த கொண்டாட்டத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மா சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்திருக்க, கோலி வெள்ளை நிற குர்தாவில் தோன்றியுள்ளார். தற்போது, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் சொல்லி ஹோம்லியான லுக்கில் விராட் மற்றும் அனுஷ்கா வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.