சீருடையில் இருந்த மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!

0

இந்தியாவில் 18 வயதிற்கு கீழ் திருமணம் தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆனபோதிலும் இன்று வரை சில இடங்களில் 18 வயதிற்கு கீழ் திருமணம் நடைபெற்று வருகின்றது. அனால் சிலர் தெரிந்தே தான் இவ்வாறு திருமணம் செய்து வருகின்றனர். இது போன்ற சம்பவம் ஒன்று வீடியோ ஆதாரத்துடன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

18 வயதிற்கு கீழ் திருமணம்

இந்தியாவில் ஒருவர் முறையான கல்வியினை பெற்று வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசு ஆண் – பெண் இருபாலினருக்கும் திருமண வயது என்று ஒன்றினை நிர்ணயித்துள்ளது. ஆனால், இதனை மீறி சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். சில இளம் வயதினர் தாங்களாகவே திருமணத்தை அந்த வயதில் செய்து கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக பெண்மணி – தலைவர்கள் வாழ்த்து!!

ஒரு வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் இளம் வயது இளைஞர் ஒருவர் தன்னுடன் இருக்கும் ஒரு சீருடை அணிந்த மாணவிக்கு தாலி கட்டுகிறார். அதனை அந்த பெண் உடனடியாக மறைகிறார். இந்த கூத்தினை அந்த இளைஞரின் நண்பர்கள் உடன் நின்று சிரித்து கொண்டே வீடியோ எடுக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி உள்ளது. இந்த செய்தி நெல்லை மாநகர காவல்நிலையத்தில் உள்ள போலீசாருக்கும் தெரிந்துள்ளது. இந்த வீடியோ நெல்லை மாவட்டத்தில் உள்ள குன்னுர் பகுதியில் தான் நடைபெற்றுள்ளது என்பதனை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here