இதுலயும் நாங்க ஃபர்ஸ்ட் தான்…..,விதிமீறல் புகார்களில் தோனி முதலிடம்….,

0
இதுலயும் நாங்க ஃபர்ஸ்ட் தான்.....,விதிமீறல் புகார்களில் தோனி முதலிடம்....,
இதுலயும் நாங்க ஃபர்ஸ்ட் தான்.....,விதிமீறல் புகார்களில் தோனி முதலிடம்....,

இந்தியாவில் திரைத்துறை பிரபலங்கள் துவக்கி கிரிக்கெட் பிரபலங்கள் வரைக்கும் விளம்பரங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதாவது, விளம்பரங்கள் திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு பணத்தை அள்ளித் தருகிறது. ஆனால், குறிப்பிட்ட பொருள் மீது சரியான புரிதல் இல்லாமல் விளம்பரங்களில் நடித்து பலரும் சிக்கல்களில் மாட்டுவதைக் காணமுடிகிறது.

குறிப்பாக, ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் அதன் விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் பல சிக்கல்களை சந்தித்தனர். அந்த வகையில், விளம்பரங்களில் நடித்து விதிமீறல் புகார்களில் சிக்கியவர்களில் எம்.எஸ்.தோனி முதல் இடத்தில் இருப்பதாக இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் தகவல் அளித்துள்ளது.

மே 19 இல் ‘மாமன்னன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்…..,படக்குழு அறிவிப்பு……,

அதே நேரத்தில், பிரபலங்களுக்கு எதிரான புகார்கள் முன்பை விட 803 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆன்லைன் தளங்களில் பிரபலங்கள் நடிக்கும் விளம்பர விதிமீறல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதாக கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here