
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்த பிரபலமானவர்தான் வினுஷா தேவி. இவர் பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில் அண்மையில் வெளியேறி இருந்தார். இதையடுத்து இவர் உடல் குறித்து கிண்டல் செய்து பேசிய நிக்சன் நேற்று நடந்த டாஸ்க் அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டிருந்தார். இது குறித்து வினுஷா இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரம்பத்தில் எனக்கு நிக்சனுக்கும் இடையில் அக்கா தம்பி உறவு இருந்து வந்தது. ஆனால் போகப்போக என்னை நிக்சன் ஓவரா கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.

மக்களே…, தீபாவளி பண்டிகையொட்டி இந்த பகுதிகளுக்கு செல்ல தடை…, அதிரடி அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!
இது பிடிக்காததால் நான் அவரை கண்டித்தேன் அதற்காக அவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் என் உடல் குறித்து கேலி செய்ததற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டேன் என நேற்று நிக்சன் கூறியது முற்றிலும் பொய். மேலும் இப்போது அவர் மன்னிப்பு கேட்டாலும் அது அவரை நல்லவராக மாற்றப்போவது கிடையாது. இதோடு போன வாரம் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய சில பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் இப்போது எங்கே? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். மேலும் எனக்கு ஆதரவாக பிக் பாஸ் வீட்டிற்குள் குரல் கொடுத்த விசித்ரா மற்றும் சில போட்டியாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.