கேரளா மாநிலத்தின் நிலையை கணித்தே இங்கு விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் – முதல்வர் அறிவிப்பு!

0

கேரள  மாநிலத்தில் ஓணம் கொண்டாட்டத்தின் காரணமாக கொரோனா அதிகரித்ததை வைத்து தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விளக்கம்:

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொது இடத்தில் சிலை வைத்து கொண்டாட தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும், இந்த பண்டிகையை வீட்டில் இருந்த படியே சிலை வைத்து கொண்டாடி, அருகில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைத்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியது.  இந்த அறிவிப்பு, ஏற்க கூடியதாக இல்லை என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  கருத்து தெரிவித்து இருந்தனர்.

எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தனர். இந்த நிலையில் பாஜக எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் அரசுக்கு வைத்த கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலளித்துள்ளார்.  இதையடுத்து தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப் போவதில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து முதல்வர் கூறியதாவது, நமது அண்டை மாநிலமான கேரளாவில், ஓணம் பண்டிகையின் போது அளிக்கப்பட்ட தளர்வுகளால் தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று மிகவும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி விட்டதாகவும் இதனால் அங்கு மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு உருவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பிரச்சனைகள் தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தற்போது பண்டிகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here