இந்தியாவில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பல்வேறு பகுதிகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட உள்ளனர். இந்த பண்டிகையின் முடிவில் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்லும் போது, சில அசம்பாவித செயல்கள் ஈடேறுகிறது. இதனால் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து பழனியில் பல்வேறு அமைப்புகளால் வைக்கப்படவுள்ள விநாயகர் சிலையை ஒரே நாளில் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “சட்ட ஒழுங்கு பாதிக்காத வகையில் விதிமுறைகளை பின்பற்றி ஊர்வலம் மேற்கொள்ளலாம்.” என அனுமதி உத்தரவை பிறப்பித்துள்ளனர் இந்த உத்தரவுக்கு இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.