ஊரே மண மணக்கும் டேஸ்டான “நண்டு கிரேவி”.,, இப்படி செஞ்சு பாருங்க..வேற லெவல இருக்கும்!!

0
ஊரே மண மணக்கும் டேஸ்டான
ஊரே மண மணக்கும் டேஸ்டான "நண்டு கிரேவி".,, இப்படி செஞ்சு பாருங்க..வேற லெவல இருக்கும்!!

அசைவ பிரியர்கள் வாரந்தோறும் மட்டன், சிக்கன்,மீன் இப்படியே சாப்டுட்டு இருக்கீங்களா, அப்ப இந்த வாரம் சுவையான “நண்டு கிரேவி” ஐ செஞ்சு சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும். இந்த பதிவில் எளிமையான முறையில் நண்டு கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இப்போ மழை காலம் என்பதால் உடல் சூட்டை அதிகரிக்க நண்டு சாப்பிடுவது ரொம்ப நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி தொந்தரவு அறவே இருக்காது. மேலும் எலும்புகளும் நல்ல வலிமையை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

 • சுத்தம் செய்த நண்டு – 1/2 கிலோகறிவேப்பிலை – சிறிதளவு
 • கடலை எண்ணெய் – தேவையான அளவு
 • தக்காளி – 2 1/2 (பொடியாக நறுக்கியது)
 • சின்ன வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
 • மிளகு, மல்லி, சீரகம்,- 1 டீஸ்பூன்
 • சோம்பு – 1/2 டீஸ்பூன்
 • தேங்காய் பால் – சிறிதளவு
 • பச்சை மிளகாய் – 2
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – சிறிதளவு (காரத்திற்கேற்ப)
 • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
 • காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
 • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • கொத்தமல்லி – சிறிது அளவு.

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் மிளகு, மல்லி, சீரகம், சோம்பு , காய்ந்த சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும், பச்சை ஸ்மெல் போனதும் நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் மற்றொரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்து, பின்னர் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். இதையடுத்து தக்காளியை போட்டு வதக்கிய பின், இஞ்சி பூண்டு பேஸ்ட், அரைத்து வைத்துள்ள மசாலா, கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

மீண்டும் தலையெடுக்கும் பறவை காய்ச்சல்.,, 13.3 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் அழிப்பு!!

இப்போது கடாயில் எண்ணெய் பிரிந்து வரும், இந்த சமயம் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை அதில் சேர்த்து மசாலா நல்ல ஓட்டும் வரை கிளறி விட வேண்டும். 5 நிமிடம் கழித்து 1/2 டம்ளர் தேங்காய் பால் ஊற்றி, கடாயை மூடி வைக்க வேண்டும். மேலும் தேங்காய் பால் optional தான். 5 நிமிடங்களுக்கு பிறகு இறக்கினால் சுவையான நண்டு கிரேவி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here