கைகோர்க்கும் விக்ரம்-விஜய் சேதுபதி கூட்டணி – முதல் சம்பவமே தரமா இருக்கே!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர் விக்ரம்-விஜய் சேதுபதி இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கூட்டணி:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றிருக்கும் நடிகர்களில் முக்கியமானவர்கள் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி.  நடிகர் விஜய் சேதுபதி தளபதி விஜய்க்கு மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து மிகப்பெரிய இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறார். இது போக, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதே போல், தமிழ் ரசிகர்களால் சியான் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விக்ரம் தற்போது மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், விக்ரம்-விஜய் சேதுபதி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது இந்த படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று கையில் எடுத்துள்ளதாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here