மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையில் ‘கும்கி’ நடிகர்….,ஜூன் 23 முதல் ‘பாயும் ஒளி நீ எனக்கு’….,

0
மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையில் 'கும்கி' நடிகர்....,ஜூன் 23 முதல் 'பாயும் ஒளி நீ எனக்கு'....,
மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையில் 'கும்கி' நடிகர்....,ஜூன் 23 முதல் 'பாயும் ஒளி நீ எனக்கு'....,

அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் கதைக்களமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். முன்னதாக, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதையடுத்து, 2022 ஆம் ஆண்டில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியானது.

39 வயதில் பிரபல நடிகர் திடீர் மரணம்…,சோகத்தில் தத்தளிக்கும் திரையுலகம்….,

இதைத் தொடர்ந்து, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வரும் ஜூன் 23 ஆம் தேதியன்று ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம் திரையரங்குகளுக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் வெளியாகும் விக்ரம் பிரபுவின் முழு நீளத் திரைப்படம் இது என்பதால் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here