Sixer அடித்த ஆண்டவர்.. விஜய் சேதுபதி, பகத் பாசில் வெறித்தனம் – விக்ரம் படத்தின் விமர்சனம் இதோ!!

0
கேரளாவில் விஜய் திரைப்படம் கூட இந்த வசூலை எட்டவில்லை - சாதனையை முறியடித்த விக்ரம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் விக்ரம் படம் இன்று (03-06-2022) வெளியாகியுள்ளது. அப்படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் காணலாம்.

விக்ரம் விமர்சனம்:

ஒரு மர்ம கும்பல் கர்னல் விக்ரம் கமல்ஹாசனை அப்பாவாக தத்தெடுத்து வளர்க்கும் மகன் காளிதாஸ் ஜெயராமை கொலை செய்கிறது. இதை தொடர்ந்து தன் மகனை கொன்றவர்களை தேடும் பொழுது கமலும் கொல்லப்படுகிறார். இந்த மர்ம கும்பலை தேடும் ஸ்பெஷல் ஃபோர்ஸ் போலீஸ் அதிகாரியாக பகத் பாசில் செயல்படுகிறார்.

மறுபுறம் மூன்று மனைவிகளுடன் உல்லாசமாக பிரம்மாண்ட வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்கும் வியாபாரி சந்தனமாக விஜய்சேதுபதி நடிப்பில் மிரள வைக்கிறார். இறுதியில் நடிகர் சூர்யா ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் திரையில் தோன்றும் காட்சி அதகளம். இப்படத்தில் முதல் பாதியில் கர்னலாகவும், மறு பாதியில் விக்ரமாகவும் நடித்திருக்கிறார் கமல். ஜெயராம், கமலை மர்ம கும்பல் கொலை செய்ய காரணம் என்ன? இறுதியில் பகத் பாசில், அவர்களை கண்டுபிடித்தாரா? விஜய் சேதுபதிக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?? என்பதே விக்ரம் படத்தில் மீதி கதை.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு comeback கொடுத்து கமல் தன் நடிப்பில் மிரள வைக்கிறார். ஒருபுறம் மகனை இழந்த தந்தையாகவும், மறுபுறம் பேரனை பாசமாக கவனித்துக்கொள்ளும் தாத்தாவாகும் சிக்ஸர் அடிக்கிறார் கமல். இதற்கு அடுத்தபடியாக பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் இனிமை. மொத்தத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கிரீஸ் கங்காதரனின் ஒளிப்பதிவில் விறுவிறுப்பும், ஆக்‌ஷன் காட்சிகளும் நிறைந்துள்ளதாக வெளியாகியுள்ளது விக்ரம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here