விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இணையும் மற்றுமொரு விஜய் டிவி நடிகை – அப்டேட்டை கேட்டு குஷியான ரசிகர்கள்!!

0

கமல் ஹாசன் ஹீரோவாக நடித்து வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ள நிலையில் அவருக்கு 3 நாயகிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டை கேட்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விக்ரம்

1986 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம். அதன் பிறகு தற்போது மீண்டும் கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த படம் கிடையாது என்று படக்குழு கூறியுள்ளது. இந்த விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கி வருகிறார்.

மேலும் முக்கிய பிரபலங்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ், ஷிவானி போன்றோர் நடிக்க கமிட்டாகியுள்ளனர். அதுவும் இந்த படத்தின் பெரிய ட்விஸ்ட் வில்லன் விஜய் சேதுபதியா?? பகத்பாசிலா?? என்பது தான்.

கமலுக்கு யார் ஜோடி என்பது குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை. ஆனால் விஜய் சேதுபதிக்கு ஷிவானி தான் ஜோடி என்று அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஷிவானி மட்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடி கிடையாதாம், இன்னும் 2 நாயகிகளை களமிறங்கவுள்ளனராம். அதுவும் இரண்டுமே விஜய் டிவி பிரபலம் தானாம்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான மைனா நந்தினி நடிக்கவுள்ளாராம். மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இதனை கேட்ட விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here