உலக நாயகனின் “விக்ரம்” படத்தில் பிரபல மலையாள நடிகர் – தீயாய் பரவும் செய்தி!!

0

உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

விக்ரம் திரைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வ இருந்து வரும் நடிகர் கமல் ஹாசன் தற்போது அரசியலில் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் இவர் பங்கு பெற்றார். இப்படியாக இருந்தாலும், இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா பறந்த தளபதி – வைரலாகும் புகைப்படங்கள்!!

கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் அவ்வளவாக நடிக்காத நடிகர் கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனுடன் இணைகிறார்.

இந்த படத்தினை ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தின் முன்னோட்ட டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது. அந்த டீஸரே சற்று வித்தியாசமானதாக இருந்தது. முழு நீள ஆக்ஷன் திரில்லராக இந்த திரைப்படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அதே போல் இந்த படத்திற்கான ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here