விக்ரம் பட ஹிட்டுக்காக நடிகை காயத்ரிக்கு கமல் கொடுத்த வில்லத்தனமான பரிசு.. என்ன தெரியுமா?

0
விக்ரம் பட ஹிட்டுக்காக நடிகை காயத்ரிக்கு கமல் கொடுத்த வில்லத்தனமான பரிசு.. என்ன தெரியுமா?

கமல் நடித்த விக்ரம் திரைப்படம் நல்ல ஹிட்டை கொடுத்ததால் அனைவருக்கும் கமல் பரிசு கொடுத்த வண்ணம் உள்ளார். இந்த திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் மனைவியாக நடித்த காயத்ரிக்கு கமல் என்ன பரிசு கொடுத்தார் என்பது குறித்தான தகவல் இணையத்தில் உலா வருகிறது.

கமல் கொடுத்த பரிசு:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்ததை காட்டிலும் நல்ல ஹிட்டை கொடுத்தது. திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே பல கோடி வசூலை அள்ளியுள்ளது. மேலும், விக்ரம் திரைப்படத்திற்காக பணியாற்றிய அனைவர்க்கும் அன்பு பரிசாக கமல் சில அன்பளிப்புகளை வழங்கி வருகிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கிட்டத்தட்ட 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள லெக்சஸ் என்னும் சொகுசு காரை பரிசாக வழங்கினார். மேலும், லோகேஷின் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு அன்பு பரிசாக இருசக்கர வாகனங்களை வழங்கினார். இதனையடுத்து விக்ரம் திரைப்படத்தில் வெறும் 3 நிமிட காட்சிகளில் நடித்துவிட்டு தனது கதாபாத்திரத்தை சிறப்பாக காட்டிய சூர்யாவிற்கு கமல் தன் கையில் அணிந்திருந்த 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சை கொடுத்தார்.

அனைவர்க்கும் பரிசு கொடுத்த கமல் விக்ரம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் மனைவியாக நடித்த காயத்ரிக்கு எந்த பரிசும் கொடுக்கவில்லையா என கேள்வி எழுந்தது. தற்போது அதை கிண்டல் செய்து ஒரு வீடியோ இணையத்தில் உலவி வருகிறது. அதாவது விக்ரம் திரைப்படத்தில் ஃபஹத்தை கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவார்கள். அந்த தலை தான் கமல் காயத்ரிக்கு கொடுத்த பரிசு என கிண்டலாக கூறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here