கேரளாவில் விஜய் திரைப்படம் கூட இந்த வசூலை எட்டவில்லை – சாதனையை முறியடித்த விக்ரம்!

0
கேரளாவில் விஜய் திரைப்படம் கூட இந்த வசூலை எட்டவில்லை - சாதனையை முறியடித்த விக்ரம்!

ஜூன் 3 அன்று வெளியான விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் வசூலை அள்ளி குவித்து வருகிறது. கேரளாவில் அதிகமான வசூலை பெற்ற தமிழ் திரைப்படம் என்கிற சாதனையையும் விக்ரம் திரைப்படம் தான் பெற்றுள்ளது.

விக்ரம் திரைப்படம்:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மற்றும் கமல் நடிப்பில் விக்ரம் படம் பல எதிர்பார்ப்புகளுக்கு நடுவே கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். எதிர்பார்த்ததை காட்டிலும் விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட்டை கொடுத்ததால் விக்ரம் திரைப்படத்தில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவர்க்கும் கமல் அன்பு பரிசை வழங்கினார். திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் திரையரங்கங்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் கதறி கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் மட்டுமே இது வரைக்கும் 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்துவிட்டது இப்படம்.

Exercise செய்யும் போது கூட இப்படி காட்றிங்களே.. சாக்ஷி அகர்வாலால் அல்லல்பட்டுப்போன இளசுகள்!!

இன்னும் பல கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் விக்ரம் திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. கேரளாவில் மட்டும் 25 கோடி வசூல் கிடைத்துள்ளது. இது வரைக்கும் எந்த தமிழ் திரைப்படமும் கேரளாவில் இந்த அளவுக்கு வசூலை பெற்றதில்லை என கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here