விக்ரம் பட வெற்றிக்கு முக்கிய காரணமே இதுதான் – முதல் முறையாக மனம் திறந்த நடிகர் கமல்!

0
விக்ரம் பட வெற்றிக்கு முக்கிய காரணமே இதுதான் - முதல் முறையாக மனம் திறந்த நடிகர் கமல்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தற்போது வரை திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது பற்றி நடிகர் கமல் மனம் திறந்துள்ளார்.

விக்ரம் திரைப்படம்:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயற்றிய முதல் படமான மாநகரம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி மற்றும் விஜய்யை வைத்து மாஸ்டர் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படம் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான நிலையில் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 450 கோடியை வசூலித்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் குறித்து கமல்ஹாசன் அண்மையில் நடந்த நிகழ்வில் கூறியுள்ளார். அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உலக நாயகன் கூறியதாவது, இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் ஆடியன்ஸ் என்கிற மக்கள் தான்.

திருமண பந்தத்தில் இணையும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. அதுவும் மாப்பிள்ளை யாருன்னு நீங்களே பாருங்க!

ஏனென்றால் மக்களுக்கு தெரியும் எந்த படத்தை வெற்றிக்கு தள்ள வேண்டும் என்று, பெரிய நட்சத்திரங்கள் நடித்த பல திரைப்படங்கள் கூட தற்போது படுதோல்வி அடைய தான் செய்கிறது அதற்கும் ஆடியன்ஸ் தான் காரணம். மேலும் படம் அவர்களை ஈர்க்கும் வகையில் இருந்தால் மட்டுமே இந்த வெற்றி படத்திற்கு கிடைக்கும். இது தான் விக்ரம் படம் வெற்றி பெற்றதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here