அதிரடியான தோற்றத்தில் விக்ரம் – வெளியான ‘கோப்ரா’ செகண்ட் லுக் போஸ்டர்!!

0

இன்று கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷலாக விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விக்ரம் – கோப்ரா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இது வரையிலும் பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் அக்ஷன் ஹீரோவாகவே இருக்கிறார். கடைசியாக அவர் சாமி 2 படத்தில் நடித்ததை தொடர்ந்து ‘கோப்ரா’ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அங்கிருந்து கிளம்பி வந்தனர். இப்பொழுது பல தளர்வுகள் ஏற்பட்ட பின்னர் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டரே தெறிக்கவிடும் அளவிற்கு இருந்தது.

ஜன.1 முதல் வாகனங்கள் அனைத்திற்கும் பாஸ்டேக் கட்டாயம்!!

இந்த படத்தை டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் போன்றோரும் நடித்துள்ளனர். இதில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இதில் வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசைமைக்கிறார்.

இப்படிபட்ட அசத்தல் கூட்டணி இணைவதால் தான் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். இதில் 15 தோற்றங்களில் அவர் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here