விஜயகாந்த் உடல்நிலை மோசம் – தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க? மனைவி பிரேமலதா உருக்கமான பேச்சு!!

0
விஜயகாந்த் உடல்நிலை மோசம் - தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க? மனைவி பிரேமலதா உருக்கமான பேச்சு!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல்நிலை ஒரே சீராக இல்லை என அவரது மனைவி பிரேமலதா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மனைவி பகீர்:

கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகனாக திகழ்ந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் சமுதாய சிந்தனை உள்ளதாக இருந்து வந்தது. இதையடுத்து, அரசியலில் சில ஆண்டுகள் கொடி கட்டி பறந்து வந்தார்.  தற்போது,  கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல்நிலை குன்றி, மருத்துவமனைக்கு செல்வதும் வருவதுமாக இருந்தார்.

இதில், கடந்த சில தினங்களுக்கு முன், இவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்து வந்த இவர் அண்மையில் குணமடைந்து வீடு திரும்பினார். தொடர்ந்து இவருக்கு மருத்துவ சிகிச்சைகள் தொடர வேண்டும் என மருத்துவர்கள் அறிவித்தனர். தற்போது இவரது, உடல்நிலை குறித்து இவரது மனைவி பிரேமலதா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, விஜயகாந்திற்கு உடல்நிலை சீராக இல்லை என்றும் 10 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை அவரை கட்டாயம் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். விரைவில் இந்த நிலைகளில் இருந்து அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என நம்புவோம் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here