விஜயகாந்தின் வருங்கால மருமகள் இவர்தானா? இணையத்தில் தீயாய் பரவும் ஜோடி போட்டோக்கள்!!

0
விஜயகாந்தின் வருங்கால மருமகள் இவர்தானா? இணையத்தில் தீயாய் பரவும் ஜோடி போட்டோக்கள்!!

நடிகர் விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவரது மகன் சண்முக பாண்டியன் காதலிப்பதாக கூறப்படும் பெண்ணுடன் எடுக்கப்பட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வைரல் புகைப்படங்கள்:

தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். ஆக்ஷனில் அசத்தி வந்த விஜயகாந்த் திடீரென அரசியலில் களம் புகுந்தார். வலுவான எதிர்க்கட்சியாக இருந்து வந்த இவர், உடல்நிலை சரியில்லாமல் சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகினார். தற்போது இவரது கட்சிப் பணிகளை இவருடைய மனைவி பிரேமலதா கவனித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜயகாந்திற்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் விஜய பிரபாகரனுக்கு, அண்மையில் கீர்த்தனா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது, இவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.

தற்போது இவர் அந்த பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், ஒருவேளை இவர் தான் விஜயகாந்தின் வருங்கால மருமகளோ? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here