விஜய்-யுவன் போட்டோ இணையத்தில் செய்த மிகப்பெரிய சாதனை – இது சும்மா..இனி தான் மெயின் பிக்ஸரே இருக்கு!!

0

நடிகர் விஜய்யின் 67வது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக சொல்லப்பட்டு வெளியிடப்பட்ட போட்டோ இணையத்தில் புது வித சாதனை ஒன்றை படைத்துள்ளது.

வேற லெவல் சாதனை:

இளைய தளபதி விஜய் தற்போது, நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற கோடை விடுமுறையில் இந்த திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி 67 படத்தில் விஜய் மற்றும் யுவன் கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வலம் வந்தது.

கடந்த 200 ம் ஆண்டில் வெளிவந்த புதிய கீதை படத்தை அடுத்து, இவர்கள் கூட்டணி அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த, போட்டோ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 24 மணி நேரத்தில் 134K லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்தது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை விஜய் மற்றும் யுவன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here