18 வருடங்களுக்கு இணைகிறதா விஜய்-யுவன் கூட்டணி?? கோலிவுட் உலகத்தில் உலா வரும் ஊகம்!!

0

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த புதிய கீதை படத்தை அடுத்து, விஜய்-யுவன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீண்டும் கூட்டணியா:

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது ஒருபுறமிருக்க, கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து விஜய் பணியாற்றினார். இந்த படத்தை அடுத்து அவர்கள் காம்போ இணையவே இல்லை. இதையடுத்து தற்போது, மீண்டும் இரண்டாவது முறையாக அவர்கள் கூட்டணி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் யுவன் விஜயுடன் எடுத்த தன் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here