அய்யயோ என்ன இப்படி ஆயிடுச்சு.., விஜய்க்கு விழுந்த அடுத்த அடி.., தள்ளிபோடப்பட்ட ஷூட்டிங்!!

0
அய்யயோ என்ன இப்படி ஆயிடுச்சு.., விஜய்க்கு விழுந்த அடுத்த அடி.., தள்ளிபோடப்பட்ட ஷூட்டிங்!!
அய்யயோ என்ன இப்படி ஆயிடுச்சு.., விஜய்க்கு விழுந்த அடுத்த அடி.., தள்ளிபோடப்பட்ட ஷூட்டிங்!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் மன்னனாக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் என மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இப்படம் 90 சதவீதம் முடிந்த நிலையில், தற்போது ஐதராபாத்தில் ஷூட்டிங் செய்து வருகின்றனர்.

ஐயோ.,சமந்தாவுக்கா இந்த நோய்? சிகிச்சைக்காக அமெரிக்கா பறக்கும் நடிகை! வைரலாகும் பகீர் தகவல்!!

இந்நிலையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த படப்பிடிப்பு திடீரென ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது இயக்குனர் வம்சியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை ஒரு வாரமாக ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதனால் படத்தின் ஷூட்டிங் ஒரு வாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் நடிகர் விஜய் ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இந்த சம்பவத்தால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here