தளபதியின் வாரிசு படத்தின் மரணமாஸ்  அப்டேட்.., 2nd சிங்கிள் தேதி வெளியீடு!!

0
வாரிசு படத்தின் உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்.., வெளியாகிய மாஸ் அப்டேட்!!
தளபதியின் வாரிசு படத்தின் மரணமாஸ்  அப்டேட்.., 2nd சிங்கிள் தேதி வெளியீடு!!

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும், வாரிசு படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாரிசு அப்டேட் :

இளைய தளபதி விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாரிசு. தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதுபோக பிரபு, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற் று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அனைத்து பணிகளையும் முடித்து வருகிற பொங்கலுக்கு, படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தளபதின் பிறந்த நாளன்று, வாரிசு படத்தின் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இணையத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து, தளபதி குரலில் உருவான ரஞ்சிதமே பாடல் சோசியல் மீடியாவில் வெளியாகி, பெரிய சாதனைகளை படைத்தது.

இதனைத் தொடர்ந்து, தளபதி விஜய் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், வாரிசு படத்தின் 2nd சிங்கிள் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதியான நாளை மறுநாள் 4 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்வரா கிரியேஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை, விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here