விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின், சண்டை காட்சிகள் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
வீடியோ லீக்:
விஜய் நடித்து வரும், வாரிசு படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது, நடிகர் விஜய் மற்றும் ஷாம் இருவரும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சண்டை காட்சியில் நடித்த வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ஏற்கனவே படத்தின், போட்டோ இணையத்தில் வெளியாகிய நிலையில் தற்போது வீடியோ லீக்காகி இருப்பது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ஷாம், இந்தப் படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்துள்ளார்.
ஷாம் இதற்கு முன், விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது 23 ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் இருவரும் வாரிசு படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்