பாதிலேயே நின்று போன விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங் – தலையில் துண்டை போட்ட தளபதி ரசிகர்கள்!!

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஒருவாரமாக நின்று போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பாதிலேயே நின்ற ஷூட்டிங்:

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் பிரபு, ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின், ஷூட்டிங் ஒரு வாரமாக தடைபட்ட நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஹைதராபாத்தில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் ஷூட்டிங் நடத்த முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது போக, தெலுங்கு திரையுலகினர் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து  காலவரையற்ற போராட்டத்தை தொடங்க உள்ளதால்  இந்த ஷூட்டிங் தொடர்ந்து தடைபடும் என்றும் பேசப்படுகிறது. இதனால், படத்தின் ஷூட்டிங் கேள்விக்குறியாகி உள்ளதாக குறிப்பிட்டு தளபதி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here