விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதில் மக்களுக்கு நம்பர் 1 ஷோவாக இருந்து பிக்பாஸ் சீசன் 7 அடுத்த மாதம் பிரம்மாண்டமாக துவங்க இருக்கிறது. மேலும் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீட்டை கொண்டு வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் பிக்பாஸ் வருகையால் பிரபல ஷோ இழுத்து மூட இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் நடிகை ராதிகா நடுவர்களாக பங்கேற்ற ‘கதாநாயகி’ நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் டிஆர்பி இல்லாததால் விரைவில் இந்த நிகழ்ச்சியை முடிக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது.