விஜய் டிவி உங்களையும் விட்டு வைக்கலயா – சீரியலில் களம் இறங்கிய டி.ஆர்?

0
சின்ன திரை டிவி சேனல்கள் என்றால் முன்னிலையில் இருப்பது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பப்படும் அனைத்து தொடர்களும் பெரும்பாலும் மக்களை கவர்ந்ததாகவே இருக்கும். மேலும் போட்டிபோட்டு கொண்டு புதுமைகளை செய்வதில் விஜய் டிவிக்கு நிகர் விஜய் டிவி தான்.
தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் என்றால் அது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியல். இந்த சீரியல் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே கதாநாயகன் வற்புறுத்தி கதாநாயகிக்கு கட்டாயம் கல்யாணம் செய்வதாக பல புகார்களும் சர்ச்சைகளும் எழுந்தது.
மேலும் இந்த சீரியலை டெலிகாஸ்ட் செய்ய கூடாது என்றும் பலர் தெரிவித்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத விஜய் டிவி சென்ற திங்கட்கிழமை முதல் மதியம் 3 மணிக்கு தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலை ஒளிபரப்பி வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் பிரபல நடிகர் டி. ராஜேந்தர் இடம் பெற்றுள்ளார். தற்போது இந்த படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் விஜய் டிவி, அவர கூட ஷூட்டிங் ஸ்பாட் வரவச்சுட்டாங்களே என்பது போன்ற கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here