விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. லாக்டவுன் சமயத்தில் இருந்தே வெள்ளித்திரை ரேஞ்சுக்கு சீரியலை நகர்த்தி வருவதால் இல்லத்தரசிகள் மத்தியில் அனைத்து சீரியலுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் நிலையான ஒரு இடத்தை பிடித்து வருகிறது. இந்நிலையில் இப்பொழுது ரசிகர்களுக்கு சோகமளிக்கும் விதமாக தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. அபியும், வெற்றியும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று காத்திருந்த நிலையில் வெற்றி குற்றவாளி இல்லை என்ற உண்மை தெரிந்து அபி முழு மனதாக ஏற்றுக்கொண்டார்.

மேலும் வெற்றிக்கு போலீஸ் வேலையும் கிடைத்துள்ளதால் சுடர், அபியுடன் சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் விதமாக சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. இனிமேல் இந்த சீரியல் இந்த டைமுக்கு ஒளிபரப்பாகாது என்பதால் சற்று ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.