ஒரே டெஸ்ட் தான்.., டிஆர்பி ரேட் எகிறிடுச்சு.., கடைசில கோபிக்கே இப்படி ஆப்பு வச்சுடீங்களே!!

0
ஒரே டெஸ்ட் தான்.., டிஆர்பி ரேட் எகிறிடுச்சு.., கடைசில கோபிக்கே இப்படி ஆப்பு வச்சுடீங்களே!!
ஒரே டெஸ்ட் தான்.., டிஆர்பி ரேட் எகிறிடுச்சு.., கடைசில கோபிக்கே இப்படி ஆப்பு வச்சுடீங்களே!!

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் ப்ரைம் டைம் சீரியல் என்றாலே அதற்கு தனி மவுசு இப்போது வரை இருந்து வருகிறது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான TRP ரேட்டிங் வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தால் 10.28 புள்ளிகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலில் பல உண்மைகள் வெளிவர உள்ளதால் விஜய் டிவியின் NO.1 தொடராக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அடுத்ததாக 9.15 புள்ளிகளை பெற்று பாக்கியலட்சுமி 2ம் இடத்தை பிடித்துள்ளது.

இதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 7.36 புள்ளிகளுடன் 3 ம் இடத்திலும், ஈரமான ரோஜாவே 2 சீரியல் 5.56 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், ராஜா ராணி 2 சீரியல் 5.04 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது. இதில் என்ன மோசமான நிலையில் என்றால் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 4.32 புள்ளிகளை பெற்று 7 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here