விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்த புதிய எபிசோடுகள் – எந்தெந்த சீரியலுக்கு தெரியுமா??

0

லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் சீரியல்கள் அனைத்தும் பழைய காட்சிகளை ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் தற்போது திங்கள் முதல் முக்கிய சீரியல்கள் அனைத்து புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் சந்தோசத்தில் உள்ளனர்.

புதிய எபிசோடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக மறுபடியும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் தான் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் அதிகம் பாதிப்படைந்தது சின்னத்திரை தான். மேலும் சீரியல்கள் ஏதும் பார்க்க முடியாமல் மக்களும் தவித்து வந்தனர்.

எத்தனை நாட்கள் தான் பழைய சீன்களை பார்ப்பது என்று சலித்தும் வந்தனர். இந்நிலையில் தற்போது சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் விஜய் டிவியில் மீண்டும் புதிய எபிசோடுகள் திங்கள் முதல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த ‘ஈரமான ரோஜாவே’, ராஜபார்வை, வேலைக்காரன், அன்புடன் குஷி, செந்தூரப்பூவே, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல்களில் திங்கள் முதல் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here