நேர மாற்றம் செய்யப்படும் பிரபல சீரியல்கள்….,ரசிகர்கள் கவனத்திற்கு….,

0
நேர மாற்றம் செய்யப்படும் பிரபல சீரியல்கள்....,ரசிகர்கள் கவனத்திற்கு....,
நேர மாற்றம் செய்யப்படும் பிரபல சீரியல்கள்....,ரசிகர்கள் கவனத்திற்கு....,

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் நேர மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நேர மாற்றம்

இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையுள்ள அனைத்து தரப்பு மக்களுக்குமான பொழுதுபோக்குகளில் ஒன்று சீரியல்கள். இந்த சீரியல்கள் இல்லாமல் பலரும் ஒரு நாள் கூட இருப்பதில்லை. குறிப்பாக, இன்றைய காலத்து பார்வையாளர்களை கவரும் விதமாக சினிமா பாணியில், காதல் மற்றும் ஆக்ஷன் கதைக்களங்களுடன் சீரியல்கள் ஒளிபரப்பப்படுவதால் அது கவனம் ஈர்த்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், சீரியல்கள் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ள விஜய் டிவி கடந்த சில மாதங்களாக பல புதிய சீரியல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சிறகடிக்கும் ஆசை மற்றும் மகாநதி போன்ற சீரியல்கள் மக்களின் வரவேற்புகளை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, ‘ஆஹா கல்யாணம்’ மற்றும் ‘பொன்னி’ என்ற சீரியல்களை புதிதாக களமிறக்க இருக்கிறது விஜய் டிவி.

ஒரு நாள் தான் லீவு உனக்கு.., ரெண்டு பொண்டாட்டி காரனுக்கு வந்த சோதனை.., மத்திய பிரதேசத்தில் நடந்த நகைச்சுவை சம்பவம்!!

இந்த புதிய சீரியல்களின் வருகையால், விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த சில சீரியல்கள் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 20 ஆம் தேதி முதல் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் மாலை 6 மணிக்கும், ‘ராஜா ராணி 2’ சீரியல் 6.30 மணிக்கும், ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here