விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் பிரபலத்தின் சீரியல் – ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் வருகிற நவம்பர் 1ம் தேதியில் இருந்து விஜய் மியூசிக் சேனல்லில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மீண்டும்  ஒளிபரப்பாகும் சீரியல்:

விஜய் தொலைக்காட்சியின் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஓன்று சின்னத்தம்பி. இந்த சீரியலின் நாயகன் பிரஜன் தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  இந்த சீரியலின் கதாநாயகி பவானி ரெட்டி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார்.  பலகட்ட திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் 2019 ஆம் ஆண்டு அதன் இறுதி அத்தியாயம் ஒளிபரப்பாகியது.

இதையடுத்து இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகுமா? என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் இருந்து வந்தனர். இதை கவனத்தில் கொண்டு உள்ள விஜய் டிவி நிர்வாகம், வருகிற நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து இரவு 9 மணிக்கு விஜய் மியூசிக் என்ற தங்களது மற்றொரு சேனலில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here