என்னது., இப்போ டாப் சீரியல் இது இல்லையா? ஒரு சின்ன Gap-ல இவ்ளோ பெரிய ஆப்பு வச்சுட்டாங்களே!!

0
என்னது., இப்போ டாப் சீரியல் இது இல்லையா? ஒரு சின்ன Gap-ல இவ்ளோ பெரிய ஆப்பு வச்சுட்டாங்களே!!
என்னது., இப்போ டாப் சீரியல் இது இல்லையா? ஒரு சின்ன Gap-ல இவ்ளோ பெரிய ஆப்பு வச்சுட்டாங்களே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், டிஆர்பி ரேட்டிங் வீதம் டாப் ஹிட்டில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

சீரியல் லிஸ்ட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில், இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் ரேஞ்சில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்கள் குறித்த அதிரடி லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் 6.8 புள்ளிகளை பெற்று பாரதி கண்ணம்மா முதலிடத்தையும், 6.7 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி 2 ம் இடத்தையும், 6.0 புள்ளிகளைப் பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 3 ம் இடத்தையும் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து 5.8 புள்ளிகளுடன் ராஜா ராணி 2 நான்காம் இடத்திலும், 4.9 புள்ளிகளுடன் மௌன ராகம் 2 ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது. இதுவரை டாப் ரேஞ்சில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி, தற்போது 2ம் இடத்தைப் பெற்றிருப்பது சேனலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியா கோபிக்கு எதிராக எடுக்கப் போகும் அதிரடி முடிவு குறித்து இந்த சீரியல் சுவாரஸ்யமாக போனதாகவும், தற்போது அதில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அந்த இடத்தை பாரதி கண்ணம்மா நிரப்பி விட்டதாகவும் சீரியல் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here