என்ன பார்த்த பழம் மாதிரி தெரியுதா… நான் கொஞ்சம் வேற மாதிரி – கொந்தளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கோபத்தில் கண்ணன் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த தொடரில், மூர்த்தியின் இரண்டாவது தம்பி ஜீவா மகள் கயல் பாப்பாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. இதனால், மொத்த குடும்பமும் குதூகலத்தில் இணைந்துள்ளனர். இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் மூர்த்தியின் கடைசி தம்பியாக சரவண விக்ரம் நடித்து வருகிறார்.

நீண்ட பிரிவுக்கு பிறகு தற்போது, தான் இவர் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக நபராக வலம் வரும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் விஐபி படத்தில் பேசும் மாஸ் டயலாக் ஒன்றுக்கு அவர் ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் நீங்க உண்மையாகவே வேற ரகம் என கமெண்ட் செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here