மூர்த்தி..கதிர்.. எல்லாரோரையும் பீட் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் – ஒரு நாளைக்கே இவ்வளவு சம்பளமா?

0
அரபி குத்து ஸ்டெப்பை அப்படியே போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வேற லெவல் டான்ஸ் தான் போங்க!!
அரபி குத்து ஸ்டெப்பை அப்படியே போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வேற லெவல் டான்ஸ் தான் போங்க!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கதாபாத்திரங்களின் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் இணையத்தில் வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் டிஆர்பியை எகிற வைக்கும் முக்கிய தொடர்களில் இதுவும் ஒன்று. இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் கதாபாத்திரங்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த தொடரில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின் முத்து ஒரு நாளைக்கு 12,000 சம்பளம் வாங்குகிறார்.

இவர் இயக்குனர் பாரதிராஜாவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக வெங்கட் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜீவா ஒரு நாளைக்கு 10,000 சம்பளம் வாங்குகிறார். அவரது மனைவியாக மீனா பாத்திரத்தில் நடிக்கும், ஹேமா ஒரு நாளைக்கு 8,000 சம்பளம் வாங்குகிறார். அதேபோல் மூர்த்தியின் மூன்றாவது தம்பியாக, கதிர் பாத்திரத்தில் நடிக்கும் குமரன் நாளொன்றுக்கு 10,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

அதேபோல் மூர்த்தியின் கடைசி தம்பியாக நடிக்கும் கண்ணன், ஒரு நாளைக்கு 6,000 சம்பாதிக்கிறார். இவர்கள் எல்லோரையும் விட, மூர்த்தியின் மனைவியாக தனம் பாத்திரத்தில் நடித்து வரும் சுஜித்ரா ஒரு நாளைக்கு 17,000 சம்பளம் வாங்கி தனது சக நடிகர்களை பீட் செய்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here