பொன்னகை வேண்டாம்…உங்கள் புன்னகை போதும் – பாக்கியலட்சுமி ஜெனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் மனைவி ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

செழியனின் அன்பு மனைவி :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவியான பாக்கியா, தனது குடும்பத்திற்காக படும் இன்னல்களை எல்லாம் இந்த சீரியல் படம் பிடித்துக் காட்டுகிறது. மேலும் பொறுப்பற்ற கணவனாக, பாக்கியாவின் கணவர் கோபியின் தவறுகளை எல்லாம் இந்த சீரியல் சுட்டிக்காட்டுகிறது.

இந்த தொடரில், பாக்கியாவின் மூத்த மகனாக நடித்து வரும் செழியனின் மனைவியாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா பல ரசிகர்களிடம் இது பெரிய அபிமானத்தை பெற்றுள்ளார். சமீபகாலமாக அவர் பற்றிய காட்சிகள் எதுவும் இந்த சீரியலில் இடம் பெறாமல் இருந்தது.

இந்த நிலையில் அவரது புகைப்படம் ஒன்று, இவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், என்ன ஜெனி.. உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று காமெடியாக கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இது பயங்கரமாக பரவி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here