இடுப்பில் குழந்தை.., பக்கத்துல மாமியார்.., செம குத்தாட்டம் போட்ட மாஜி விஜய் டிவி நடிகை – என்ன ஒரு குடும்பம்டா!!

0

சின்னத்திரை நடிகை சமீரா ஷெரிப் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்த பிரபல சீரியல் நடிகைகளுள் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு தொடரின் மூலம் புது முக நடிகையாக சின்னத்திரைக்கு அறிமுகமானார். முதல் சீரியலிலே அமோக வரவேற்பை பெற்று நல்ல ரீச்சை அடைந்தவரானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சின்னத்திரை ஆலியா – சஞ்சீவ் ஜோடிகள் இணைவதற்கு முன்னதாகவே பகல் நிலவு சீரியல் ரீல் ஜோடி ரியல் ஜோடியாகினர். அதாவது அந்த சீரியலில் சமீராவுக்கு ஜோடியாக நடித்த சையத் அன்வரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் அப்போ வேற லெவல் ஹிட் அடைந்தது. அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெக்கை கட்டை பறக்குது மனசு தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் சமீரா.

இந்த தொடர் சில காரணங்களால் இடையிலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு சின்னத்திரை பக்கம் காணாமல் போன சமீரா மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது முதல் அனைத்துமே யூட்யூப் விடியோவை பார்த்தும், இன்ஸ்டாவை பார்த்தும் தான் ரசிகர்கள் தெரிந்து கொண்டனர். இந்த நிலையில் சமீரா இடுப்பில் அவரது குழந்தையை வைத்து கொண்டு மாமியாருடன் குத்து ஆட்டம் போட்ட ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேற லெவல் வைரல் பெற்று லைக்கை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sameera Sherief (@sameerasherief)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here