இதுவரை இல்லாத புதிய அவதாரத்தை கையில் எடுத்த பாரதி கண்ணம்மா வெண்பா – உங்களுக்கு இவ்ளோ திறமையா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக கலக்கி வரும் பரீனா, பிரபல தனியார் தொலைக்காட்சியின் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பாளினியாக மாறிய பரீனா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில், பாரதியின் தோழியாக, கண்ணம்மாவுக்கு வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் தனது மரண மாஸ் நடிப்பை கொடுத்து வருபவர் நடிகை பரீனா. தனது பிரசவத்திற்காக கொஞ்சம் ஓய்வெடுத்த இவர், தற்போது முழு மூச்சாக சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது வில்லத்தனத்தை பார்க்கவே இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில், இவர் பிரபல கலர்ஸ் தமிழ் என்ற தனியார் தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள கலர்ஸ் தமிழ் திருவிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். அவரோடு, சேர்த்து பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆதவன் அவர்களும் இந்த நிகழ்வில் தொகுப்பாளராக களம் இறங்குகிறார். ஜனவரி 14ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் இப்போது இருந்தே தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here