பெண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நடிகை – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவி சீரியல் நடிகை, ராஷ்மி ஜெயராஜ் க்கு  பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்தும் ரசிகர்கள்:

கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த, புகழ்பெற்ற சீரியல் நடிகை ராஷ்மி ஜெயராஜ். இவர் சன் டிவியில் விதி என்ற சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து, பெரிய அளவில் பேசப்பட்டார். இதையடுத்து, ரிச்சு என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், மீண்டும் நடிக்க வர மாட்டார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், இதனை தவிடுபொடியாக்கி விஜய் டிவியில் ராஜபார்வை சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் இந்த தொடர், எதிர்பார்த்த அளவு ரீச் அடையாததால் 200 எபிசோடுகளோடு நிறுத்தப்பட்டது. அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த இவர் தற்போது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்த, அவரது போட்டோ குழந்தையுடன் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதையடுத்து ரசிகர் பலரும் ராஷ்மி ஜெயராஜூக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here