திருமண நாளன்று குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி புகழ்….,ரசிகர்கள் வாழ்த்து மழை…,

0
திருமண நாளன்று குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி புகழ்....,ரசிகர்கள் வாழ்த்து மழை...,
திருமண நாளன்று குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி புகழ்....,ரசிகர்கள் வாழ்த்து மழை...,

விஜய் டிவியில் ஒரு காமெடியனாக அறிமுகமாகி இப்போது வெள்ளித்திரையில் நடிகராக வளர்ந்து இருப்பவர் புகழ். ‘குக் வித் கோமாளி’ ஷோ மூலம் பிரபலமான நடிகர் புகழ் கடந்த ஆண்டு இந்த தேதியில் தனது காதலியான பென்ஸி என்பவரை மணமுடித்தார். சொல்லப்போனால், திருமணத்திற்குப் பிறகு தான் புகழ் வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்க, இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி புகழ் தனது முதலாவது திருமண நாளைக் கொண்டாடிய புகழ் தான் அப்பாவாகப் போகும் விஷயத்தை அறிவித்துள்ளார். அந்த வகையில், புகழ் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி பென்ஸியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here