சசிகுமார் படத்தில் கமிட்டான விஜய் டிவி புகழ் – ரசிகர்களுக்கு அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

0

விஜய் டிவி நட்சத்திரமான புகழ் தனது அடுத்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அடுத்த பட வாய்ப்பு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியில் கெஸ்ட் ரோல் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கியவர் விஜய் டிவி புகழ். இதனை அடுத்து பிரபல நிகழ்ச்சிகளில் ஒரு சில காட்சிகளில் நடித்து  கொண்டிருத்தவருக்கு மிகப்பெரிய ஹிட் ஷோவாக அமைந்தது  குக் வித்  கோமாளி.

அதன் இரண்டு சீசனிலும் தனது எதார்த்தமான காமெடி செய்கைகளால் ரசிகர்கள் மத்தியில் நிரந்தரமான நன்மதிப்பை சம்பாதித்தார். ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருந்த மிகப்பெரிய ஆதரவாலும்,இவரது அசாத்தியமான திறமையினாலும் வெள்ளித்திரைக்கு சென்றார்.

ஏற்கனவே அருண் விஜய்யுடன் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சசிகுமாருடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here