கணவரை விட்டு விஜய் டிவி பிரியங்கா விலகியது உண்மையா? வீடியோவை பார்த்து உறுதிப்படுத்தும் ரசிகர்கள்!

0

விஜய் டிவியில் உள்ள முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. மேலும் முக்கிய பிரபலங்களை நேர்காணல் செய்தும் பாப்புலர் ஆனார் பிரியங்கா. இவருக்கு 2016 ஆம் ஆண்டு பிரவீன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் இவர் தன் கணவர் பற்றி தான் வெளியிடும் யூடியூப் வீடியோக்களில் குறிப்பிடுவார்.

ஆனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதே தன் கணவர் பற்றி வாயை திறந்துருக்க மாட்டார். ஒரு வேளை பிரியங்கா கணவரை பிரிந்து விட்டாரோ என ரசிகர்கள் யூகித்து கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் இது பற்றி ரசிகர்கள் பிரியங்காவிடம் கேக்கும் பொழுதும் அது குறித்து எந்த ஒரு தெளிவான பதிலையும் பிரியங்கா தெரிவிக்கவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் சமீபத்தில் நடந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் திருமண சுற்று நடந்தது. அனைவரும் தங்கள் திருமணம் குறித்து கருத்துக்களை பகிர்ந்த நிலையில் பிரியங்கா அவ்வாறு எதுவுமே கூறவில்லை. இந்நிலையில் கனடா நாட்டிற்கு பாரின் ட்ரிப் ஒன்று சென்றுள்ளார் பிரியங்கா. இவர் தனியாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளதால் ஒரு வேளை இணையத்தில் வெளிவந்த தகவல்கள் உண்மையோ என யூகித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அங்கிருந்து வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here