அடடே.., குட்டி பிரியங்காவா இது?? அப்போ தொறந்த வாயை இன்னும் மூடல.., கியூட் கிளிக்ஸ் இதோ!!

0

சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எந்த அளவு ரசிகர் கூட்டங்கள் உள்ளதோ அதே அளவுக்கு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷோ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி, அவரது காமெடி பேச்சாலும், கலகலப்பான சிரிப்பாலும் மக்கள் மனதில் நின்ற சிறந்த தொகுப்பாளினி என்றால் அது பிரியங்கா தான்.

இப்போதெல்லாம் பிரியங்காவுக்காகவே அநேகர் சூப்பர் சிங்கர் ஷோவை பார்த்து வருகிறார்கள். இவர் ஆப் ஸ்க்ரீனிலும் சரி! ஆன் ஸ்க்ரீனிலும் சரி! இரண்டிலுமே படு லூட்டியாகவும், மா.கா.பா ஆனந்த் உடன் அடிக்கும் கமெண்டுகளும் பார்ப்பதற்கு டாம் அண்ட் ஜெர்ரி போல பார்வையாளர்களின் கண்ணே படும் அளவிற்கு வேற லெவல் நகைச்சுவையாக இருக்கும். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இறங்கிய பிறகு பலரும் பல விதமாக பேசினார்கள்.

அதாவது, இருக்க பேரை கெடுத்துக்க போறாங்கன்னு நெட்டிசன்கள் விமர்சனம் செய்யாத நாளே இல்லை. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மாறாக பிரியங்கா மக்கள் மனதில் இன்னும் ஆழமாக பதியும் அளவுக்கு இடத்தை பிடித்தார். அவர் பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பது அவரது தம்பியை பற்றித்தான். தற்போது பிரியங்கா அவரது தம்பியுடன் சின்ன வயசுல எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் குழந்தை பருவத்தில எவ்வளவு க்யூட்டாக இருக்கீங்க பிரியங்கா அப்படின்னு கொஞ்சி வருகிறார்கள். அதே வேளையில் அப்போ திறந்த வாயை இன்னும் மூடல அப்டினும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் நீங்களும் பிரியங்கா ரசிகர்ன்னா இந்த போட்டோவை பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here