கதிரை பழிவாங்க துடிக்கும் ஆப்போசிட் டீம்.,, பயத்தில் முல்லை.,, இன்றைய பரபரப்பான எபிசோட்!!

0
கதிரை பழிவாங்க துடிக்கும் ஆப்போசிட் டீம்.,, பயத்தில் முல்லை.,, இன்றைய பரபரப்பான எபிசோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிர்-முல்லை சூப்பர் ஜோடி போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்..

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிர்-முல்லை இருவரும் சூப்பர் ஜோடி போட்டியில் 5 வது சுற்றில் கலந்து கொண்டு உள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியின் ஆங்கர் போட்டியின் குறிப்புகளை கொடுக்கின்றனர். அதாவது இது ஒரு சமையல் போட்டி, பார்ட்னர் கண்ணை கட்டி கொண்டு சமைக்க வேண்டும், அதுமட்டு மட்டுமல்லாமல் இடையில் பாட்டு போடுவோம் டான்ஸ் ஆடிக்கொண்டு சமைக்க வேண்டும் என சொல்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து கதிர் உட்பட மற்ற ஜோடிகளும் சமைக்க தொடங்கிவிட்டனர். கண்ணை கட்டிக்கொண்டு சமைக்கும் கதிரை பார்த்து முல்லை நீங்க ரொம்ப ஸ்டைலா வேலை பாக்குறீங்க என சொல்கிறார். அடுத்து முல்லை கண்ணை கட்டி கொண்டு சமைக்கிறார், கதிர் அவருக்கு உதவி பண்ணுகிறார். இந்த 5 வது சுற்றில் கத்தி-முல்லை வெற்றி பெற்றதாக நிகழ்ச்சியின் ஆங்கர் அறிவிக்க, ஆப்போசிட் டீம் மெம்பர் கதிர்-முல்லையை பார்த்து முறைகின்றனர்.

கலங்கும் இனியா.,கதறி துடிக்கும் கோபி – ராதிகா எடுத்த அதிரடி முடிவு? பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் எபிசோட்!!

மறுபுறம் ஜனார்த்தன், மூர்த்தி வீட்டுக்கு வருகிறார். அப்போது ரெஜிஸ்ட்ரேஷன் நல்ல படியா நடந்துச்சா?? என கேட்க, ஜீவா இல்லை என சொல்கிறார். அதற்கு ஜனார்த்தன் கேள்வி பட்டேன் அதான் கேட்டுட்டு போலாம்னு வந்தேன், கதிர் வேணும்னு தான் ரெஜிஸ்ட்ரேனுக்கு வரல என குற்றம் சொல்கிறார். அதற்கு மூர்த்தி இல்லை அவன் ஏதோ வெளியில் மாட்டிகிட்டேன் என கதிருக்கு சப்போர்ட் செய்கிறார். மற்றொரு பக்கம் ஆப்போசிட் டீம் மெம்பர், போட்டியின் இன்ஜார்ஜிடம் ஒரு ஜோடி மட்டும் எப்படி எல்லா சுற்றுளையும் வின் பண்ணுவாங்க என கேள்வி கேட்க , அதற்கு அவர், அந்த ஜோடி நல்ல விளையாடுறாங்க அதான் வின் பண்றாங்க என சொல்லிவிட்டு போய்விட்டார்.

இதையடுத்து ஆப்போசிட் டீம் மெம்பர், கதிர் என்ன அடிச்சிருக்கான் அவன நான் திரும்பி அடிக்கணும், ஆள் ஏற்பாடு பண்ணுங்க என உறவினரிடம் சொல்வதை முல்லை கேட்டுவிட்டார். இதையடுத்து ரூமிற்கு சென்ற முல்லை இதை நினைத்து பதட்டமாக இருந்தார், கதிர் என்னாச்சு என கேட்க ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார். மேலும் கதிர் முல்லையை ரூமை விட்டு வெளியில் அழைத்து வரும்போது, அந்த ஆப்போசிட் டீம் மெம்பரை பார்த்து பயத்தில் அப்படியே நின்றுவிட்டார் முல்லை. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here