குட்டையை குழப்பும் மீனா.,திட்டவட்டமாக சொல்லிய மூர்த்தி – பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் எபிஸோட்!!

0
குட்டையை குழப்பும் மீனா.,திட்டவட்டமாக சொல்லிய மூர்த்தி - பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் எபிஸோட்!!
குட்டையை குழப்பும் மீனா.,திட்டவட்டமாக சொல்லிய மூர்த்தி - பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் எபிஸோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மூர்த்தி குடும்பத்தினர் கதிர் வீட்டுக்கு வந்துவிட்டனர், இருப்பினும் இங்கு அவர்களுக்கு வசதி பத்தவில்லையோ? என கதிர் வருத்தப்படுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ், இன்றைய எபிசோடில், மீனா அடம் செய்து ஜீவா பக்கத்தில் தூங்குகிறார். இதையடுத்து மூர்த்தி, நம்ம புது வீடு கட்டுற வரைக்கும் தான் இப்படி, கட்டுனதுக்கும் அப்புறம் பிடிச்ச இடத்துல தூங்கலாம் என்று சொல்கிறார். அதற்கு மீனா, மாமா எல்லோருக்கும் தனி தனி அறை வேண்டும் என்று செந்தமிழில் பேச, ஜீவா வாய மூடிட்டு படுடி என்று சொல்கிறார். பின்னர் கதிர் வசதி பத்தலைனா வேற வீடு பாத்துருவோமா? என்று கேட்க, வேணாம்டா நம்ம வசதி பார்த்தா வாழ்த்தோம், நம்ம ஒண்ணா ஒரே வீட்ல இருக்குறதே சந்தோசம் தான் என்று சொல்லிவிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதைக்கேட்டு கண்ணன் கிளாப் செய்ய, அதற்கு ஜீவா என்னடா மறுபடியும் கொசு கடிக்குதா? என்று நக்கல் அடிக்கிறார். இதையடுத்து அனைவரும் தூங்கி விட்டனர். மறுநாள் காலையில், முல்லை கதிரை காணோம் என்று அப்பாவிடம் கேட்க, கடைக்கு போயிருப்பாரு என்று சொல்லிவிட்டார். அந்த சமயம் கதிர் பால், வடை வாங்கிட்டு வந்து எல்லாரிடமும் கொடு என்று முல்லையிடம் கொடுக்கிறார். இதையடுத்து கதிர், நம்ம வீடு ரொம்ப பழசா இருக்குல்ல, எதையும் யோசிக்கமா அவுங்களை கூட்டிட்டு வந்துட்டேன் என்று சொல்லி வருத்தப்பட, அதற்கு முல்லை இதையெல்லாம் அவுங்க பெருசா எடுக்கமாட்டக? என்று சமாதானம் சொல்கிறார்.

நீ ஒரு அசிங்கம்., அசீமை நேருக்கு நேராக வெளுத்து வாங்கிய ADK – இப்பதான் ஆட்டம் சூடு பிடிக்குது!!

மறுபுறம் மூர்த்தி, முல்லையிடம் கதிர் எங்கப்பா என்று கேட்க, அவர் கடைக்கு போய் விட்டார் என்று சொல்கிறார். இதையடுத்து கண்ணன், மீனா, ஐஸ்வர்யா மூவரும் மட்டும் தூங்கிட்டு இருந்தனர், அப்போது தனம் எல்லாரையும் எழுப்பனும், கண்ணன் ஆபிசுக்கு போகணும் என்று சொல்கிறார். அடுத்து ஒவ்வொருத்தரா தனம் எழுப்புகிறார், அப்போது கண்ணன் வேகமா எழுந்து, என்ன புது இடமா இருக்கு, என்ன யாராச்சு கடத்திட்டு வந்துட்டாங்களா, என்று உளறுகிறார். அப்போது மூர்த்தி நம்ம, கதிர் வீட்டுக்கு வந்தது மறந்துருச்சா என்று கேட்கிறார். தனம், மீனாவை எழுப்ப நைட்டு ரொம்ப கொசு கடிச்சிது நான் தூங்கவே இல்லை என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் .இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here