ஐயோ.,, நீங்க போயிட்டா என்ன ஆக போகுதோ? பாண்டியன் ஸ்டோர்ஸிலிருந்து வெளியேறும் முக்கிய பிரபலம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வரும் பிரபலம் அந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

விலகும் பிரபலம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், விரைவில் 1000-மாவது எபிசோடை நெருங்க உள்ளது. இந்த தொடரில், முல்லை பாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா மறைவை அடுத்து, காவ்யா அறிவுமணி என்ற நடிகை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தொடர்ந்து பல எபிசோடுகளில், இவர் முல்லையாக மக்கள் மனதில் ரிஜிஸ்டர் ஆகியுள்ள நிலையில், தற்போது இவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன் பலமுறை இது போன்ற வதந்திகள் வெளியானாலும், இதற்கான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.

தற்போது, காவியா தனது சக நடிகர்களான தனம், மூர்த்தி, கதிர் ஆகியோர் புகைப்படங்களை பதிவிட்டு  மிஸ் யூ ஆல் என குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்பது இந்த பதிவில் இருந்து தெரிவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here