பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு அறுவை சிகிச்சை – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

0

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், மீனா பாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் வீடியோ  வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் மீனா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர், பல எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், ஜீவா மனைவியாக மீனா என்ற பாத்திரத்தில் நடித்தவர் ஹேமா. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற ஒரு வீடியோவை இவர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அந்த வீடியோவில் பேசிய இவர், தனக்கு கழுத்துக்கு கீழே ஒரு கட்டி இருந்ததாகவும், அதை ஆபரேஷன் செய்து அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தான் இதை புற்றுநோய் என நினைத்து பயந்து போனதாகவும், இதுபோன்ற செயல்களை பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது எனவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள்  ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here