கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறாங்க., வாழ்க்கையே வெறுத்துருச்சு – பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் கதறல்!!

0
கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறாங்க., வாழ்க்கையே வெறுத்துருச்சு - பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் கதறல்!!
கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறாங்க., வாழ்க்கையே வெறுத்துருச்சு - பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் கதறல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் குமரன், தன் சினிமா கெரியரில் நடந்த சோகமான விஷயங்களை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

குமரன் கதறல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். என்னதான், குடும்பத்தில் பிரச்சினைகள் வந்தாலும் இதையெல்லாம் சமாளித்து அண்ணன், தம்பி எப்படி ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதை. இந்தத் தொடரில் கதிர் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமரன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான வதந்தி என்ற வெப் சீரிஸில் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில், தன் சினிமா கெரியரில் நடந்த சோகமான விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதாவது தனக்கு போன் பண்ணி உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கு என கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்துவாங்க, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், friends ரோல் என கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி நடித்தேன்.

வைகைப்புயல் வடிவேலு தாயார் அதிர்ச்சி மறைவு., சோகத்தில் மூழ்கிய குடும்பம்! ரசிகர்கள் கண்ணீர்!!

ஒரு கட்டத்தில் என்ன வாழ்க்கை இது? பேசாம எல்லாத்தையும் முடிச்சுக்கலாம் என்றெல்லாம் நினைக்க வைத்தது. ஆனால் இதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொண்டேன். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என மனதை தேற்றிக்கொண்டேன். வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடாத கஷ்டங்களை எல்லாம் இந்த சினிமாவுக்காக அனுபவித்து இருக்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here