விஜய் டிவியில், புதிதாக தொடங்க உள்ள பொன்னி சீரியல் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதிய சீரியல்:
சன் டிவியின், சீரியல் அனைத்தும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் ரேஞ்சில் இடம் பிடித்து விடுவது வழக்கம். இந்த சீரியல்களுக்கு போட்டியாக, விஜய் டிவி தற்போது புதிய பல சீரியல்களை களம் இறக்க உள்ளது. ஏற்கனவே சிறகடிக்க ஆசை என்ற புதிய சீரியலுக்கான, ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனைத் தொடர்ந்து தற்போது, பொன்னி என்ற புதிய சீரியல் விரைவில் களமிறங்க உள்ளது. இதற்கான ஷூட்டிங், நேற்று பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த சீரியலில் நடிகர் சபரி மற்றும் வைஷூ ஆகியோர் மெயின் ரோலில் நடிக்க உள்ளனர்.
வாணி போஜனுடன் குடும்பம் நடத்தும் விஜய் பட நடிகர்.., இது எத்தனை நாளுக்குனு தெரியலையே?
இவர்களைத் தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் சீரியல் வில்லியாக நடித்த ஜனனி பிரபு மற்றும் டிக்டாக் பிரபலம் கியாரா ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சீரியலுக்கான ப்ரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடவை, டிஆர்பி காக விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான் கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகும் என சீரியல் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.