பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியலுக்கு டஃப் கொடுக்க வரும் புதிய சீரியல் – அதுவும் இவர் இயக்குகிறாரா??

0

விஜய்  டிவியில்  ஏற்கனவே பிரபல  சீரியல்கள்  அனைத்தும் ஒளிபரப்பாகி வரும் நிலையில்  புதிதாக  ஒரு சீரியலை விஜய் டிவி களமிறக்கியுள்ளது. அதனை  பிரவீன் பென்னட் தான் இயக்க போவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி  சீரியல் 

விஜய் டிவியில் பல  விறுவிறுப்பான  தொடர்கள்  ஒளிபரப்பாகி டிஆர்பி  ரேட்டிங்கிலும்  முதல் இடத்தை பிடித்து  சாதனை  செய்துள்ளது. சீரியல்கள்  மட்டுமல்ல பல  காமெடி  நிகழ்ச்சிகளும்  ஹிட்  அடித்து சிறந்த  பொழுது  போக்கு  சேனல்  என்ற  அந்தஸ்தையும்  பெற்றுள்ளது.

மேலும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பாக்யலக்ஷ்மி, நாம்  இருவர் நமக்கிருவர் என பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில்  பலரின்  எதிர்பார்ப்புகளை  தூண்டும்  விதமாக  தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் விஜய் டிவியில்  களமிறங்கவுள்ளது.

விகடன்+விஜய் டிவி காம்போ புதியது என்பதால் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு  ஆர்வம் காட்டி  வருகின்றனர். இந்நிலையில்  மீண்டும்  ஒரு சீரியலை விஜய் டிவி களமிறக்கியுள்ளது. அதுவும் இந்த சீரியலை பிரவீன்  பென்னட்  இயக்குகிறாராம். குளோபல் வில்லேஜ்  தயாரிக்கிறதாம்.

மேலும்  விஜய் டிவி  தொகுப்பாளராக  பப்பு மற்றும்  ஜோடி  நம்பர்  ஒன்னில் கலந்துகொண்ட வெங்கட்  பல  வருடங்களுக்கு  பிறகு  இந்த  சீரியல் மூலம்  ரீஎன்ட்ரி  கொடுக்கிறார்.  இந்த  சீரியலுக்கு  நம்ம  வீட்டு    என்றும்  பெயரிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here