பிரபலத்தின் மாமியாரால் அசிங்கப்பட்ட விஜய் டிவி.. வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!!

0

தமிழில் பல சேனல்கள் இருந்தாலும் அனைத்துக்கும் முன்னணி சேனல் ஆக இருப்பது விஜய் டிவி. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் திரைப்படங்கள் எதுவும் பெரிதாக அந்த அளவுக்கு ரிலீஸ் ஆகாததால் ஆண்கள் கூட சின்ன திரை பக்கம் தாவி விட்டனர்.

ஏற்கனவே உச்சியில் இருந்த விஜய் டிவியின் TRP ஊரடங்கால் மேலும் எகிறியது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு புது புது நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது. மேலும் இரண்டு சீரியல்களை ஒன்றாக்கி மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பினர்.

இவ்வாறு புதுமைகளுக்கு பெயர் போன ஒன்றாகவே விஜய் டிவி இருந்து வருகிறது. தற்போது விஜய் டிவியில் Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக மணிமேகலை உள்ளார். சமீபத்தில் வெளியான இதன் ப்ரோமோவில் யோகேஷ்ஷின் அம்மா, மணிமேகலையை உருவக் கேலி செய்து இருந்தார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து, உருவக் கேலிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் மணிமேகலை இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here